Friday, October 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/29/large/889174.jpgகோவை வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்ததில் தாமதம் இல்லை; எந்த ஆதாரமும் அழிக்கப்படவில்லை: ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தூத்துக்குடி: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்ததில் தமிழக அரசு தாமதம் செய்யவில்லை. வழக்கு தொடர்பான எந்த ஆதாரமும் அழிக்கப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,‘‘கோவை கார் சிலிண்டர் வெடிப்புசம்பவம் நடந்த பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு பரிந்துரைக்க தமிழக அரசு4 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டது தவறு. அவகாசம் வழங்கினால், தீவிரவாதிகள் அனைத்து தடயங்களையும் அழித்துவிட வாய்ப்பு உண்டு’’ என்று கூறினார்.

இந்நிலையில், அரசு சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தூத்துக்குடியில் தமிழகதொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு நேற்று மாலை கூறியதாவது: கோவையில் கடந்த 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் நடந்த உடனேயே தமிழக காவல் துறையினர் துரிதமாக விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் சோதனைநடத்தியதுடன், அவரது கூட்டாளிகளையும் உடனடியாக கைது செய்தனர். சம்பவம் நடந்த உடனேயே மத்திய உளவுத்துறை (ஐ.பி.),தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஐ.பி., என்ஐஏ உடன் இணைந்தே தமிழக காவல் துறை இந்த வழக்கை விசாரித்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்