Wednesday, October 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/05/large/878716.jpg‘வள்ளலார் - 200’ இலச்சினை, தபால் உறை வெளியீடு; ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'வள்ளலார் - 200' இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை இன்று (அக்.5) வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: "சென்னை ராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், “வள்ளலார் – 200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.5) வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்