Thursday, November 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/18/large/899732.jpgசத்தியமூர்த்தி பவன் மோதல் விவகாரம்: ரூபி மனோகரன் 24-ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க காங். ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற மோதல் தொடர்பாக, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன், கட்சியின் மாநில எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம் அனுப்பியுள்ளது.

சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்