Monday, November 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/22/large/901701.jpgதமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அழகிரியை மாற்ற கார்கே மறுப்பு: முன்னாள் தலைவர்கள் ஏமாற்றம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை உடனே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்காததால், டெல்லியில் முகாமிட்டுள்ள மூத்த தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் வலுத்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை நீக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கடந்த 20-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்