Monday, November 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/29/large/907448.jpgராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட், ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும் கட்டிடக் கலை, கட்டமைப்பு நிபுணர்களுக்கு ‘சீர்மிகு பொறியாளர் விருது 2022’ - சென்னை மியூசிக் அகாடமியில் டிச.1-ம் தேதி விழா

சென்னை: கட்டிடக் கலை, கட்டமைப்பு கலையில் சிறந்து விளங்குவோருக்கு ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘சீர்மிகு பொறியாளர் விருது - 2022’ வழங்கப்படுகின்றன. சென்னை மியூசிக் அகாடமியில் வரும் டிச.1-ம் தேதி நடைபெறும் விருது விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இத்துறை வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.

கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு துறையில் சிறந்து விளங்கும் பொறியாளர்கள் பலர், தமிழ்ச் சமுதாயத்தின் பொதுவெளியில் இன்னமும் அறியப்படாமல் உள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க பொறியாளர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு ‘சீர்மிகு பொறியாளர் விருது - 2022’ஐ வழங்கி, பாராட்டி கவுரவிக்கும் முயற்சியை ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்