Thursday, December 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/02/large/908625.jpgதிருவண்ணாமலை | கார்த்திகை தீபத் திருவிழா அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை நடவடிக்கை: டிஜிபி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் காவல்துறை செய்து வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு, வியாழன் அன்று மாலை ஆய்வு செய்தார். விஐபிக்கள் மற்றும் விவிஐபிக்கள் வந்து செல்லும் வழித்தடம், அவர்கள் அமரும் இடங்கள், அவர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்