Monday, December 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/06/large/910728.jpgஇஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது திமுக ஆட்சியில்தான்: வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

கோவை: இஸ்லாமியர்களை பயங்கரவாதி களாக சித்தரிப்பது திமுக ஆட்சியில்தான் என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரை, பாஜகவின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கிறது. இதை நாங்கள் சொல்வதைவிட, திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகனே கூறுகிறார் என்றால், அந்த அளவுக்கு மக்களின் மனங்களில் தாமரை இடம்பிடித்துள்ளது. சிறுபான்மையினரிடையே நற்பெயரை பாஜக பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்