Sunday, December 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/26/large/919920.jpgகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாகன சோதனையில் 281 பேர் மீது வழக்கு பதிவு: பைக் ரேஸில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது

சென்னை: சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர். குறிப்பாக, 350 தேவாலயங்களை சுற்றி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், நேற்று முன்தினம் இரவு போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 4 வழக்குகள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 6 வழக்குகள், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தது தொடர்பாக 68 வழக்குகள், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதாக 28 வழக்குகள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகள், 18 வயது நிரம்பாதவர்களுக்கு வாகனம் ஓட்ட கொடுத்தது தொடர்பாக 2 வழக்குகள் என மொத்தம் 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்