
சென்னை: மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வீட்டில் இருந்தபடியே கைப்பேசியில் உள்ள வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. சென்னையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதில் தினமும் 1.80 லட்சம் முதல் 2 லட்சம் பேர்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக, பயண அட்டை முறை, க்யூ ஆர் குறியீடுமுறை ஆகிய முறைகள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்