Friday, December 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/24/large/918992.jpgவிருது கோரி விண்ணப்பித்த பேராசிரியரின் அசல் சான்றிதழ்களை திருப்பி தராவிட்டால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

சென்னை: விருது கோரி விண்ணப்பித்த பேராசிரியரின் அசல் சான்றிதழ்களை 8 வாரங்களில் திருப்பி வழங்காவிட்டால் ரூ.10 லட்சம் இழப்பீடுவழங்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சுப்ரமணியன், தமிழ்நாடு மூத்தவிஞ்ஞானிக்கான விருதுக்காக2017-ம் ஆண்டு பல்கலைக்கழகநிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார். தமக்கு விருது வழங்கப்படாத நிலையில், தனது அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்கக் கோரி சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். எந்த பதிலும் வராத நிலையில் தனது அசல் சான்றிதழ்களை திருப்பித்தர உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் மனு தாக்கல் செய்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்