Monday, December 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/27/large/920549.jpgதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஜனவரி 9-ல் சட்டப்பேரவை கூடுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று கூறியதாவது: வரும் ஜன. 9-ம் தேதி காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அன்றே அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஆளுநர் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடைபெறும் என்பதை முடிவு செய்யும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்