Saturday, December 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/25/large/919552.jpgவீராணம் ஏரி 6-வது முறையாக நிரம்பியது

கடலூர்: கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி நீர் மூலம் காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதிகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் வீராணம் ஏரி உள்ளது.

இந்த ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது. நேற்று ஏரி, தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. தற்போது, கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு விநாடிக்கு 65 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்காக பாசன வாய்க்கால்களில் விநாடிக்கு 330 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்