Saturday, December 31, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/01/large/922754.jpgதமிழக விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: அமைச்சர் உதயநிதி

சென்னை: சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில், தென்னிந்திய அளவில் பல்கலை.களுக்கு இடையிலான மகளிர் ஹாக்கிப் போட்டிகள் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இதில் 30 பல்கலை. அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் கர்நாடக மாநிலம் மைசூர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கேரள மாநில கோழிக்கோடு பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்