Friday, December 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/31/large/922379.jpgமழையால் பாதிக்கப்பட்ட 48,593 விவசாயிகளுக்கு ரூ.50.89 கோடி நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த அக்.1 முதல் டிச.4-ம் தேதி வரை கனமழையால் பல மாவட்டங்களில் அதிக அளவில் பயிர்ச் சேதம் ஏற்பட்டது. வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நவ.14-ம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்ச்சேதம் கணக்கிடப்பட்டது. இதன் அடிப்படையில், மிக அதிகமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 32,533 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.43.92 கோடி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்