Wednesday, January 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/26/large/934067.jpgஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தான் உண்மையான வேட்பாளர் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

ஈரோடு: ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான வேட்பாளர்’ என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவையடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 21-ம் தேதி அமாவாசை நாளன்று திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி ஆகியோர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு பிரச்சாரத்தை தொடங்கினர். இந்நிலையில், திமுக கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ. வேலு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்