Wednesday, February 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/01/large/937362.jpgபுதுச்சேரி | பாஸ்வேர்ட் மறந்ததாகக்கூறி சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அதிகாரிகள்

புதுச்சேரி: பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) மறந்ததாகக்கூறி புதுச்சேரியில் குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததால் பிப்ரவரி் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள குரூப் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் 2023 ஜனவரி 31ம் தேதிக்குள் அரசு தெரிவித்திருந்த இணையதள முகவரிக்கு தங்களுடைய 2022ம் ஆண்டின், அசையும், அசையா சொத்துக்கள் குறித்த விபரங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பலர் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்