Tuesday, February 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/08/large/940697.jpgஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது - மனுக்கள் இன்று பரிசீலனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. நிறைவு நாளான நேற்று அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மற்றும் 36 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 37 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர், அமமுக, அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உட்பட நேற்று முன்தினம் வரை 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்