Tuesday, February 14, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/15/large/944129.jpgசெங்கல்பட்டு | தி.மலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் எதிரொலி: செங்கை வங்கி அதிகாரிகளுடன் மாவட்ட எஸ்.பி. ஆலோசனை

செங்கல்பட்டு: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பு குறித்து காவல் கண்காணிப்பாளர் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதுதொடர்பாக வங்கி மேலாளர்களுடன் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் 51 வங்கிகளைச் சேர்ந்த மேலாளர்கள் மற்றும் வங்கி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்