Saturday, March 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/26/large/966002.jpgகிருஷ்ணகிரி, தருமபுரியில் இடி, மின்னலால் பண்ணையில் தீ - 5,000 கோழிகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி / ஓசூர் / தருமபுரி / அரூர்: கிருஷ்ணகிரி , தருமபுரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அரூர் அருகே இடி, மின்னலுக்கு கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு பண்ணையில் இருந்த 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பகலில் வெயில் அதிகரித்த நிலையில், இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கிருஷ்ணகிரி, பாரூர், சூளகிரி, ஊத்தங்கரை, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்