Tuesday, March 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/29/large/967693.jpgபொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு - அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள், நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும், அதிமுக பொதுச்
செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்