Saturday, April 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/01/large/969381.jpgஆங்கிலேயர்கள்தான் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தினர் - கல்லூரி விழாவில் ஆளுநர் பேச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் கே.ஜி.பிரகாஷ் வரவேற்றார். கல்லூரி செயலர் எஸ்.சிங்கராஜ் கல்லூரியில் 50 ஆண்டுகால செயல்பாடு குறித்த அறிக்கையை வாசித்தார்.

பளையபாளையம் இராஜுக்கள் மகமை பொதுபண்டு தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, ராம்கோ குழும தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். பொன்விழா அறிவியல் வளாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘‘ராஜபாளையத்தை சேர்ந்த எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். மகாகவி பாரதியார் பாரத மாதாவை வாழ்த்தி ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தியாவை ‘வேதமுடையதிந்த நாடு, நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு’ என்று குறிப்பிடுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்