Tuesday, April 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/26/large/981771.jpg‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’-வின் சுகாதார விழிப்புணர்வு பாடல்கள் வெளியீட்டு விழா

பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியாவும் இணைந்து ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணையவழி விழிப்புணர்வு நிகழ்வை நடத்தின. இதனால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு செல்ல முடிந்தது.

தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழலில், மக்களிடம் மீண்டும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தொடர்ந்து சுகாதாரத்தைக் கடைபிடிக்கத் தூண்டும் நோக்கிலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ஐந்து விழிப்புணர்வு பாடல்கள் உருவாக்கப்பட்டு, ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’வினால் வெளியிடப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்