Monday, April 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/18/large/977579.jpgதமிழகத்தில் ஏப். 20, 21-ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 20, 21-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப். 18, 19-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப். 18-ம்தேதி (இன்று) சில இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகமாக இருக்கக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்