Monday, June 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/12/large/1012180.jpgவிருதுநகர் மாவட்ட சிறையில் கைதிகளுக்குள் திடீர் மோதல் - சிலர் வேறு சிறைகளுக்கு இடமாற்றம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சிறையில் கைதிகளுக்குள் இன்று அதிகாலை திடீர் மோதல் ஏற்பட்டது. 2 கைதிகள் காயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து கலவரம் ஏற்பட்டதால் 24 கைதிகள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்ட கருவூலம் அருகே மாவட்ட சிறை இயங்கி வருகிறது. 200 கைதிகளை அடைக்கும் வசதி கொண்ட இந்த சிறையில் 10 அறைகளில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என மொத்தம் 255 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். 1வது மற்றும் 3 வது அறைகளில், கொலை வழக்கில் கைதான மதுரை மற்றும் திண்டுகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்