Friday, June 2, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/02/large/1000442.jpgகோரமண்டல் ரயில் விபத்து | ரயில்வே, மாநில அரசுகளின் உதவி எண்கள் விவரம்

பாலாசூர்: கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விவரங்களை அறிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு விரைவு, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மூன்று தனித்தனி தடங்களில் விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 350 பேர் காயமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்