Wednesday, June 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/28/large/1029464.jpgஜபமர அமதம தயபபல வஙகயல 7 ஆணடகளல 2200 லடடர தயபபல சகரபப - 2 ஆயரம கழநதகள பயன

புதுச்சேரி: தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. பிரசவத்துக்கு பிறகு, சில தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காத நிலை, பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பதால் தனிமையில் வாடும் குழந்தைகள், ஆதரவின்றி மீட்கப்படும் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் ஆகியோருக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற இடர்பாடுகளைத் தவிர்க்க தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 1989-ல் முதல் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. நாட்டில் நிகழும் பிரசவங்களை கணக்கில் கொண்டால் தாய்ப்பால் வங்கிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இருப்பினும் கடந்த சில வருடங்களாக தாய்ப்பால் வங்கியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 100 தாய்ப்பால் வங்கிகள் இந்தியாவில் செயல்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்