Friday, July 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/22/large/1061641.jpgசெந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீடு - அமலாக்கத் துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவுக்கு, அமலாக்கத் துறை, ஜூலை 26-க்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம்தேதி கைது செய்தனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்