Saturday, July 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/01/large/1032637.jpgத.மல | பயர கபபட தடடததல 1145 ஹகடர நலம கடதலக பதவசயத மசட - நடவடகககக ஆடசயர உததரவ

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் 1,145 ஹெக்டேர் விவசாய நிலங்களை கூடுதலாக பதிவு செய்து மோசடி செய்தவர்கள் மற்றும் துணையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர்களுக்கு ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகள் நிறைந்தது திருவண்ணாமலை மாவட்டம். நெல், கரும்பு, மணிலா, உளுந்து, சிறுதானியங்கள், பயிறு வகைகள், மலர்கள் சாகுபடி அதிகளவில் உள்ளன. இயற்கை சீற்றங்கள் மற்றும் வறட்சி காலங்களில் ஏற்படும் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதாக கூறி, விவசாயிகளிடம் காப்பீட்டு பிரிமீயம் தொகை பெறப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக நீடிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்