Wednesday, August 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/24/large/1106298.jpg‘தீர்ப்பை பார்த்து 3 நாட்களாக தூங்கவில்லை’: அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி கருத்து

சென்னை: தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 2006-11 காலகட்ட திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வுநீதிமன்றம் கடந்த 2022 டிசம்பரில் தீர்ப்பளித்தது.

இதேபோல, தற்போதைய வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த 2006-11 காலகட்ட திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.44.56 லட்சம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி பி.விசாலாட்சி, அமைச்சரின் நண்பர் கேஎஸ்பி சண்முகமூர்த்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் 2012-ம் ஆண்டு வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில்இருந்து சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப் பளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்