Friday, August 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/19/large/1099856.jpgஒகேனக்கல்லில் நீர்வரத்து 14,000 கனஅடியாக உயர்வு

தருமபுரி/மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 17-ம் தேதிகாலை விநாடிக்கு 12,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, அன்று மாலை விநாடிக்கு 13 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 3,260 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 9,394 கனஅடியாகவும், நேற்று காலை 9,938 கனஅடியாகவும் அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 53.15 அடியாக இருந்த நிலையில் நேற்று 53.50 அடியாகவும், நீர்இருப்பு 19.85 டிஎம்சியாக இருந்த நிலையில், 20.08 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்