Monday, August 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/22/large/1104523.jpgசென்னை அருகே ரூ.4,276 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சென்னை அருகே உள்ள பேரூரில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் ரூ.4,276.44 கோடியில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட, கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்