Friday, September 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/02/large/1116760.jpgமழைகால நோய்களை எதிர்கொள்ள மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்

சென்னை: மழைக்கால நோய்களை எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்டசுகாதாரத் துறை உதவி இயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வடகிழக்கு பருவமழை காலத்தில் தொற்றுநோய்கள், பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்கஉரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்