Tuesday, October 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/04/large/1133128.jpgமங்களூரு - தாம்பரம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம் - மங்களூரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06049), தாம்பரத்தில் இருந்து வரும் 6, 13, 20, 27-ம் தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

மேலும், மங்களூரு - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்:06050), மங்களூருவில் இருந்து வரும் 7, 14, 21, 28-ம் தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் ரயில்நிலையம் சென்றடையும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்