Friday, November 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/24/large/1158443.jpg"முதலில் தமிழன், அடுத்துதான் இந்தியன்" - அன்புமணி ராமதாஸ் பேச்சு

சென்னை: "உலகில் எங்கு சென்றாலும் முதல் பெருமை நான் தமிழன். பெருமை மட்டுமல்ல, ஆணவம் இருக்க வேண்டும். அடுத்துதான் இந்தியன்." என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். "உலகின் மிக பழமையான மொழி, தமிழ். நம் தாய் மொழியை தமிழ்நாட்டிலேயே பாதுகாக்க வேண்டும் என 40 ஆண்டுகளாக போராடுகிறோம். இந்த நிலைக்கு தான் இன்று தமிழ்நாட்டில் தமிழ் இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே தமிழ் மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்