Sunday, November 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/26/large/1159319.jpgதென் மாவட்ட அமமுக கூடாரத்தை அசைத்துப் பார்க்கும் அதிமுக - என்ன செய்யப்போகிறார் டிடிவி.தினகரன்?

மதுரை: மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த அமமுக முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக அதிமுகவில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அமுமுக கூடாரத்தை அதிமுக அசைத்துப்பார்த்து வருவதால் டிடிவி.தினகரன், இதற்கு என்ன எதிர்வினை ஆற்றப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவில் சசிகலா, டிடிவி.தினகரன் இருவரும் கட்சியையும், ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உடனடியாக கொண்டு வந்தனர். அதன்பிறகு அவர்கள் முதலமைச்சராக நியமித்த கே.பழனிசாமிக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படவே அதிமுகவை கே.பழனிசாமி தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அதிமுகவின் பொதுச்செயலாளரான கே.பழனிசாமி ஆனபிறகு சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் போன்றோரை கட்சியை விட்டே நீக்கினார். டிடிவி.தினகரன், மதுரை மாவட்டம் மேலூரில் அமமுக என்ற தனிக்கட்சி தொடங்கி ஒரளவு சிறப்பாகவே செயல்பட்டார். தென் மாவட்டங்களில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக பெற்ற வாக்கு வங்கி, அதிமுக ஆட்சியை பிடிக்காமல் போனதிற்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்