Saturday, November 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/26/large/1159257.jpgஅந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி உருவாகிறது: டிச.1 வரை மழை நீடிக்கும்

சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. தமிழகத்தில் வரும் டிச.1-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் டிச.1-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்