Wednesday, December 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/07/large/1164330.jpgமிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்க இடைக்கால நிவாரணம் தேவை: ரூ.5,060 கோடி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதத்தை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். பால், உணவுபொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்