Thursday, December 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/22/large/1171805.jpgநெல்லை, தூத்துக்குடியில் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் குடும்ப அட்டைக்கு ரூ.6,000 நிவாரணம் அறிவித்தார் முதல்வர்: குமரி, தென்காசிக்கு ரூ.1,000 நிவாரணம்

திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த 2 மாவட்டங்களின் இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 16-ம்தேதி இரவு முதல் 18-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதில் கடுமையாகபாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி குறிஞ்சிநகர்போல்பேட்டை பகுதியிலும், பின்னர் திருநெல்வேலிசந்திப்பிலும் வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த முதல்வர், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்