Wednesday, January 31, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/01/xlarge/1191609.jpgகுடியுரிமை சட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) 7 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று மத்திய பாஜக இணை அமைச்சர் கூறியுள்ளார். இலங்கை தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதா, சட்டம் ஆனதற்கு முழு முதல் காரணமே, நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்