
சென்னை: சட்டப்பேரவை கூட்டத் தொடர், பட்ஜெட் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜன.23-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இம்மாதம் 3-வது வாரத்தில் நடைபெறலாம் என கூறப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜாம் புயல், டிச 17, 18 தேதிகளில் அதிகனமழை, வெள்ளம் இவற்றின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழல், அதற்கான நிவாரணம் வழங்குதல், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குதல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் ஆளுநருடனான கருத்துமோதல் உள்ளிட்ட காரணங்களால் பேரவைக்கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்