Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687296.jpgகள்ளக்குறிச்சியில் சத்துணவு பணியாளர்கள் பணி நியமனம் தொடர்பாக மாவட்ட அதிமுக செயலாளருக்கு ஒன்றிய செயலாளர் நோட்டீஸ்

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணி நியமனத்துக்காக பெறப் பட்ட பணத்தை திரும்ப வழங்கக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஆர்.குமரகுருவுக்கு, தியாகதுருகம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஐயப்பன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். மாவட்ட நிர்வாகிகள் கூட்டத் திலும் இதுபற்றி கேள்வி எழுப்பியதால் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆர்.குமரகுரு. இவர் தலைமையில் கடந்த வாரம் கள்ளக்குறிச்சி அதிமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சியின் தோல்விக் குறித்தும், மாவட்டச் செயலாளர் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்தும் தியாகதுருகம் ஒன்றிய மேற்கு செயலாளர் ஐயப்பன் கேள்வி எழுப்பினார். மேலும் சாதி அடிப்படையில் கட்சியினரிடம் மாவட்டச் செயலாளர் அணுகியதால் அவரும் தோல்வியடைந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்