Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687298.jpgபாலியல் வன்கொடுமையில் கல்லூரி மாணவி இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி போராட்டம்: அமைச்சர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை கோரி மனு

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐ டிக்கு மாற்றக் கோரி எஸ்எஸ்பிஅலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின்குடும்பத் தாரை மிரட்டும்அமைச்சர் மீதுபோக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக் கப்பட்டது.

மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பாலியல் வன் கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி புதுச்சேரி மனித உரிமை கள் மற்றும் நுகர்வோர் பாது காப்பு இயக்கம் உள்ளிட்ட பல் வேறு அமைப்புகள் சார்பில் எஸ்எஸ்பிஅலுவலகத்தை முற்றுகையிடு வதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று நடைபெற்ற போராட் டத்திற்கு மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச் செய லாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழகம் சிவ வீரமணி, தமிழர் களம் அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் மறுமலர்ச்சி இயக்கம் பாவாடைராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்