Wednesday, July 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/29/large/698489.jpgஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை நீட்டிக்க வலியுறுத்தி ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு அதிகம் இருந்த நேரத்தில்,நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்தது. இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு அனுமதி அளித்தது. அங்கு, இதுவரை 2,100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும், 11 மெட்ரிக் டன் வாயு நிலை ஆக்சிஜனும் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 3 மாதஅனுமதி இம்மாதம் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. கரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையவில்லை. மேலும் 3-வது அலை தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் உள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் எனக் கோரி, ஸ்டெர்லைட் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்