Monday, March 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/29/large/782676.jpgசென்னையில் தனியார் பள்ளி வளாகத்தில் வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது விபரீதம் - சக்கரத்தில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு: ஓட்டுநர், உதவியாளர் கைது; பள்ளி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் பின்னோக்கி வந்த பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 7 வயது மாணவன்உயிரிழந்தான். இந்த விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநர், பெண் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள். இவர்களது 7 வயது மகன் தீக்சித். இந்தச் சிறுவன் வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்