Tuesday, March 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/02/large/773063.jpgஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுக்கு ‘மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ்’ விருது

சென்னை: மறைந்த மாண்டலின் இசைக் கலைஞர் யூ.ஸ்ரீனிவாஸ் பெயரிலான விருது, தவில் வித்வான் ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுக்கு வழங்கப்பட்டது.

மாண்டலின் எனும் மேற்கத்திய வாத்தியத்தில் கர்னாடக இசையையும் பொழிய முடியும் என்பதை இளம் வயதிலேயே உலக இசை மேடைகளில் நிரூபித்துக்காட்டிய இசை மேதை மறைந்த மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ். அவரது பிறந்தநாளை (பிப்.28) முன்னிட்டு, மாண்டலின் ஸ்ரீனிவாஸின் தம்பி மாண்டலின் யூ.ராஜேஷ் ஆண்டுதோறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இசைக் கலைஞர்களுக்கு மாண்டலின் யூ ஸ்ரீனிவாஸ் பெயரிலான விருதும் வழங்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்