Monday, April 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/05/large/784986.jpgகிண்டி அரசு கரோனா மருத்துவமனை படிப்படியாக தேசிய முதியோர் நல மருத்துவமனை ஆகிறது: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

கிண்டி அரசு கரோனா மருத்துவமனை படிப்படியாக தேசிய முதியோர் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, கிண்டி கிங்ஸ் ஆய்வக வளாகத்தில், ரூ.127 கோடி மத்திய அரசு நிதியின் கீழ் தேசிய முதியோர் நலமருத்துவமனைக்கான கட்டிடம்கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவதற்குள், 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவல் தொடங்கியது. இதையடுத்து, தேசிய முதியோர் நல மருத்துவமனை, அரசு கரோனா சிறப்புமருத்துவமனையாக மாற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்