Monday, April 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/05/large/785063.jpgதமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கோஷம்: பேச அனுமதி கிடைக்காததால் வெளிநடப்பு

சென்னை: நீட் தேர்வு உள்ளிட்ட சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு அளிக்காததால் அவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவை யில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒருமன தாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்