Wednesday, April 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/07/large/785749.jpgஅதிமுக உட்கட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை - இருதரப்பாக பிரிந்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

சென்னை: அதிமுக உட்கட்சித் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் இருதரப்பாக பிரிந்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த டிசம்பர் 2-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து அதிமுக அமைப்புத் தேர்தல் டிசம்பர் 13 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்