Monday, May 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/23/large/803709.jpg“ஆத்திகர்கள், நாத்திகர்கள் என அனைவருக்குமானதே திராவிட மாடல் ஆட்சி” - அமைச்சர் சேகர்பாபு

கோவை: திமுக ஆட்சி ஆத்திகர்கள், நாத்திகர்கள் என அனைவருக்குமான ஆட்சி. அந்த ஆட்சிக்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

கோவை பேரூரில் உள்ள பட்டீசுவரர் கோயிலில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக, பேட்டரி கார் வசதியை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: இந்துசமய அறநிலையத்துறையில், கடந்த ஆண்டு 112 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 1,641 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பாண்டு 165 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 2,441 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு முன்பு 21 கோயில்களில் பேட்டரி கார்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை பழுதடைந்து காணப்பட்டதால், அவற்றை பழுது பார்க்கவும், கூடுதலாக 13 கோயில்களில் பேட்டரி கார் வசதியை ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பேட்டரி கார் வசதி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்