Sunday, May 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/23/large/803622.jpgமாநில அரசுகளை குறைக்க கோருவது நியாயமற்றது - பெட்ரோல், டீசல் வரியை மேலும் குறைக்க வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8-ம், டீசலுக்கு ரூ.6-ம் கலால் வரியை குறைப்பதாக கடந்த மே 21-ம்தேதி மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 2014 முதல் 2021 வரை மத்திய அரசு கடுமையாக உயர்த்திய பெட்ரோல், டீசல் மீதானவரிகளை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், தற்போது மத்திய அரசு செவி சாய்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் மத்திய அரசுக்கு வருவாய் அதிகரித்த போதிலும், மாநிலங்களுக்கான வருவாய் உயரவில்லை. அதற்கு காரணம், மத்தியஅரசு பெட்ரோல், டீசல் மீதான மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்திய அதேநேரத்தில், மாநில அரசுகளுடன் பங்கிடும்கலால் வரியை குறைத்ததாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்